போதைப் பொருள் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 1லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவலர் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, தெப்பத்துப்பட்டியை சேர்ந்த, பழனிச்சாமி தேவர் மகன் ரவி என்பவரை சோதனை செய்த போது அவர் ஓட்டி வந்த வாகனத்தில் 23 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை மேற்படி வழக்கில் கடந்த 20.03.2015 அன்று திண்டுக்கல் போதைப் பொருள் வழக்குகள் சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் 30.11.2023 அன்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் இந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த புலன் விசாரணை அதிகாரி மற்றும் ஆளிநர்களை திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப கூடுதல் காவல்துறை இயக்குநர் குற்றம் மற்றும் அமலாக்கப்பிரிவு அவர்கள் மிகவும் பாராட்டினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment