திண்டுக்கல் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு
திண்டுக்கல்லை அடுத்த நல்லமாநாயக்கன் பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவலர் அருளானந்த் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜோதிமணி உள்ளிட்டோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் அபாயம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமணம் தடை சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment