திண்டுக்கல்லில் அரசு டாக்டரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஜாமீன் கேட்டு மனு
உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதால், பிற அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அங்கித் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment