திண்டுக்கல் மாநகராட்சி பொதுவெளியில் திரியும் மாடுகளை பிடித்தால் ஏலத்தில் விடப்படும்:
சமீபகாலமாக பொதுவெளிகளில் மக்களுக்கு இடையூறாக மாடுகள் அதிகமாக நடமாடுவதாக பொதுமக்களிடத்தில் இருந்து வந்த புகாரைய டுத்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் பொது இடங்கள் அரசு மற்றும் தனியார் கட்டடவளாகங்கள் ஆகியவற்றில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் கன்றுகள் கால்நடைகள் ஆகியவற்றை மாநகராட்சியால் பிடிக்கப்பட்டால் அவற்றை மீண்டும் கால்நடை வளர்ப்போர் அல்லது உரிமையாளரிடம் ஒப்படைக்க இயலாது என்றும் அப்படி பிடிக்கப்படும் மாடுகள் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment