திண்டுக்கல்லில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்டம் மாநகர,நகர, ஒன்றிய, பேரூர்,பகுதி கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், து.அமைப்பாளர்களுகான செயல் வீரர் கூட்டத்தில் வருகின்ற 4-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் மற்றும் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாடு சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட இளைஞர், மாணவர் அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment