திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தி சிலைக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக மூலவர் அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
No comments:
Post a Comment