வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே.வீரராகவராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, முன்னிலையில், நேரடியாக சென்று ஆய்வு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 25 December 2023

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே.வீரராகவராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, முன்னிலையில், நேரடியாக சென்று ஆய்வு.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், வத்தலகுண்டு பகுதியில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே.வீரராகவராவ்,  மாவட்ட ஆட்சித் தலைவர்  மொ.நா.பூங்கொடி,  முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை இன்று(24.12.2023) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே.வீரராகவராவ்,  தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2024-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள்  27.10.2023 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே, வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக்கொள்ளலாம். தகுதியுள்ள அனைத்து நபர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெயர் மாற்றம் போன்ற விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024-க்கான  சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 


வாக்காளர் பட்டியலில் தகுதியான நபர்கள் அனைவரையும் சேர்த்து, நேர்த்தியான முறையில் பட்டியலை வெளியிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும் குறிப்பிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேர்தல் அலுவலர்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்றையதினம், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே.வீரராகவராவ், தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கே.வீரராகவராவ், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்களில், பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு அனைத்து வட்டாட்சியர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ.சரவணன், தனி வட்டாட்சியர்(தேர்தல்) சரவணன், நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, அனைத்து வட்டாட்சியர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad