திண்டுக்கல் மாவட்டம் சங்கிலிமலையில் வெள்ளைக்கல் பாறை எனப்படும் இடத்தில் கனிமவளக் கொள்ளைக்காரர்களை பொதுமக்கள் சிறைபிடிக்க முயலும்போது தப்பினர்
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர்-தீத்தாக்கிழவனூர் அருகே உள்ளது சங்கிலி கரடு எனப்படும் சங்கிலிமலை இம் மலையின் மையத்தில் நள்ளிரவில் வெள்ளைக்கல் பாறை எனப்படும் இடத்தில் கனிமவளக் கொள்ளைக்காரர்கள் பாறைகளை உடைத்து அள்ளிக்கொண்டிருக்கையில் இப்பகுதி பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு சிறைபிடிக்க முயலும்போது கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை விட்டுவிட்டு கொள்ளைக்காரர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இந்த நள்ளிரவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைசார்ந்த அதிகாரிகளின் தீவிர நடவடிக்கைக்காக இப்பகுதி பொதுமக்கள் இந்த நள்ளிரவிலும் நடு மலையில் காத்திருக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment