திண்டுக்கல் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத நபர் படுகாயம் இரயில்வே போலீசார் விசாரணை
சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்தபோது இரயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்ததாக இரயில் டிரைவர் திண்டுக்கல் ஸ்டேஷன் மாஸ்டரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்
துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரயில்வே காவல்துறையினர் கீழே விழுந்த நபரை தேடி வந்த நிலையில் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் பின்புறம் அமைந்துள்ள இரயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நிலையில் இரயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மேற்படி நபர் மது போதையில் இருந்ததாலும் மயக்கத்தில் இருந்ததாலும் அவர் யார் என்று தெரியவில்லை. மேலும் இது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment