திண்டுக்கல் அருகே ஏழு உயிர்கள் பலி :
திண்டுக்கல் மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டி அருகே கவராயப் பட்டியைச் சேர்ந்தவர் தனசாமி 58 விவசாயி இவர் தனது வீட்டுக்கு அருகேயே ஆடுகளை வளர்த்து வருகிறார் இந்நிலையில் நேற்று அவர் வழக்கம்போல் தனது எட்டு ஆடுகளையும் மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று விட்டு மீண்டும் தனது வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்துள்ளார் மீண்டும் இன்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் செல்வதற்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகளை போய் பார்த்துள்ளார் அங்கு ஆடுகளை நாய் கடித்துக் குதறி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆடுகளை மருத்துவரை அழைத்து மருத்துவம் பார்த்துள்ளார் அதில் ஏழு ஆடுகள் பலியாகி உள்ளன மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்து பின்பு மீண்டும் விவசாயி தனசாமி ஆடுகளை குழி தோண்டி புதைத்தார் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment