திண்டுக்கல் மாவட்டம் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்துச் சென்ற மாநகராட்சி நிர்வாகம் :
திண்டுக்கல் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தெருக்கள் அரசு அலுவலக கட்டிடங்கள் குடியிருப்பு பகுதிகள் சாலைகள் என எங்கு பார்த்தாலும் மாடுகள் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் சுற்றித்திரிந்து உள்ளன இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் மேலும் மாநகராட்சி ஆணையர் கடந்த நாட்களில் கூறியிருப்பதாவது மேலே சொல்லப்பட்ட இடங்களில் மாடுகள் சுற்றித்திரிந்தாள் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்தால் மாட்டின் உரிமையாளரிடம் திருப்பி கொடுக்க முடியாது அப்படி பிடிபட்ட மாடுகளை எழுத்தில் விடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் இன்று திண்டுக்கல் நகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றி பிடித்துச் சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment