குதிரையாறு அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
திண்டுக்கல் பழனி குதிரையாறு அணையின் பழைய பாசனப்பரப்பு திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள நிலங்கள் பயன்பெறும் வகையில், 07.12.2023 முதல் 05.04.2024 முடிய 120 நாட்களுக்கு இடது பிரதானக் கால்வாய் வழியாக வினாடிக்கு 10 கன அடி வீதம் 103.68 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 5 அணைக்கட்டுகளின் குளம் பாசன பரப்பு மற்றும் நேரடி பாசனப் பரப்பிற்கு வினாடிக்கு 16 கன அடி வீதம் 165.89 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் வினாடிக்கு 26 கன அடி வீதம் 296.53 மில்லியன் கன அடிக்கு மிகாமல் குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 1981.59 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 2863.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment