திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/ வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 9-ம் தேதி அன்று பொது விநியோகத் திட்டம் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 6 December 2023

திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/ வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 9-ம் தேதி அன்று பொது விநியோகத் திட்டம் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது

 


திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/ வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 9-ம் தேதி அன்று பொது விநியோகத் திட்டம் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது

 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல்


பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து  வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.). வட்ட வழங்கல் அலுவலகங்களில் 09.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர் பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. 



இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரி க்கை மனு அளிக்கலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறை பாடுகள் குறித்தும் புகார் மனு அளிக்கலாம்.



எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துக்கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad