வத்தலக்குண்டு அருகே தோட்டத்து வீட்டில் இருந்த 7 அடி நீள மஞ்சள் நிற சாரைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல்லை அடுத்த வத்தலகுண்டு பெரியகுளம் சாலையில் அனுமார் கோவில் எதிர்புறம் உள்ள தோட்டத்து வீட்டில் அஜித்குமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்த போது 7 அடி நீளமுள்ள மஞ்சள் நிற சாரைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment