நத்தம் அருகே 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
திண்டுக்கல் நத்தம் அருகே எல்.வலையபட்டி கிராம பகுதியில் கட்டிடக்கலை, சிற்பத்துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது
அந்த பகுதியில் நல்லதங்காள் கோவிலின் அருகே கி.பி.18 -ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டது. 5 அடி உயரம், ஒரு அடி அகலம், இரண்டரை அடி நீளம் கொண்ட இந்த கல்வெட்டில் 19 வரிகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டில் சூரியன், சந்திரன் நடுவில் சூலாயுதம் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிற்பத் துறை ஆய்வாளர் தேவி கூறியபோது, இந்த கல்வெட்டு முன்னோர்கள் காலத்தில் மடம் கட்டி சோலை அமைப்பதற்கு கிணறு வெட்டி நீர் ஆதாரத்திற்காக பயன்படுத்தபட்டுள்ளது. மேலும் இதில் வரும் நீர் ஆதாரத்தை தர்மமாக வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது என்று தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment