திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.11 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சேக்முகையதீன் லாரியில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.11.00 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சேக்முகையதீன், அவர்கள் இன்று(07.12.2023) லாரியில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அருகில் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) திரு.சரவணக்குமார், திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, நியமன அலுவலர் மரு.த.கலைவாணி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment