திண்டுக்கல் Rm காலனி 7வது கிராஸ் பகுதியில் மாநகராட்சி ஆணையர் டெங்கு விழிப்புணர்வு செய்தார் :
திண்டுக்கல் 42வது வார்டு 7வது கிராஸ் பகுதியில் உள்ள வீடுதோறும் நேரில் சென்று திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் டெங்கு விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் தார் சாலை அமைக்கவும் கழிவுநீர் தூர்வாறவும் கோரிக்கை விடுத்தனர் உடனே அதனை நிபர்த்தி செய்ய ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார் மேலும் 8வது கிராஸில் உள்ள மாநகராட்சி பூங்கா எந்த உபயோகமும் இல்லாமல் உள்ள நிலையில் அந்தப் பூங்காவை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பித்தார் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மண்டல தலைவர் ஆனந்த் 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் உதவி ஆணையர் வில்லியம் சகாயராஜ் செயற்பொறியாளர் நாராயணன் துப்புரவு ஆய்வாளர்கள் தங்கவேலு தட்சிணாமூர்த்தி பாலமுருகன் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment