பழனி:DSPஅலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது :
திண்டுக்கல் மாவட்டம் பழனி DSP அலுவலகத்தில் DSP சரவணன் தலைமையில் நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி சார்பாக வைக்கப்படும் கொடிக்கம்பங்கள் பேனர்கள் சாலை இருபுறம் வைக்கும் கொடி மரங்கள் கொடி மரத்தைச் சுற்றி உள்ள தோரணங்கள் பொதுக் கூட்டத்தின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் போக்குவரத்து நெரிசல் போன்ற இடையூறு இல்லாத வண்ணம் நடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் அனுமதி இன்றி வைக்கப்படும் கொடி மரங்கள் கொடிக்கம்பங்கள் பேனர்கள் போஸ்டர்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட கட்சி தாங்களே அகற்றி விடுமாறும் அறிவுரை அளிக்கப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழனி உட்கோட்ட காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment