கொடைக்கானல் நகர் பகுதிகளில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியவர்களுக்கு ₹4.60 லட்சம் அபராதம் விதிப்பு :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் துண்டிக்கப்பட்ட இணைப்புகளில் இருந்து முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவதாக மின்சார வாரியத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வத்தலகுண்டு கோட்ட பொறியாளர் கருப்பையா தலைமையில் அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர் கொடைக்கானல் நகர் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் அதில் 50க்கும் மேற்பட்ட இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு மொத்தம் ரூபாய் 4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது கொடைக்கானல் நகர் பகுதிகள் மற்றும் இன்றி மேல்மலை மற்றும் கீழ் மழை பகுதிகளிலும் சோதனை நடைபெறும் என மின் கோட்ட பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment