திண்டுக்கல் ஆத்தூர்: அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாயத்திற்காக நீர் திறப்பு :
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அய்யம்பாளையத்தில் உள்ள மருதா நதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 90 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்ட உயரம் 74 அடி தற்போது நீர்மட்டம்70.25 அடி உள்ள நிலையில் விவசாய நீர் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மேலும் மருதாநதி அணையிலிருந்து அய்யம்பாளையம். பட்டிவீரன்பட்டி. சித்தரேவு தேவரப்பன் பட்டி. கொம்பைப்பட்டி. சேவுகன் பட்டி.போன்ற பகுதிகளில் உள்ள 6500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் இன்று1:11:23 90 கன அடி நீர் திறப்பு நீர் திறப்பு நிகழ்வில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் ஆகியோர் அணையின் நீர் திறக்கும் பொத்தானை அமுக்கி அணையில் இருந்து நீரைத் திறந்து வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன். மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment