திண்டுக்கல்லில்மாநகராட்சி அருகே ஜாக்டோ ஜியோ போராட்டம் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,அனைத்து துறைகளிலும் உள்ள 30% காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்,ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment