திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்வி கடன் வழங்கும் முகாம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தலைமையில் PSNA கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 29 November 2023

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்வி கடன் வழங்கும் முகாம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தலைமையில் PSNA கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல்


திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்வி கடன் வழங்கும் முகாம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தலைமையில் PSNA கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது  மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல்



திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக் கடன் வழங்கும் முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரியில் 30.11.2023 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக் கடன் வழங்கும் முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தலைமையில் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரியில் வரும் 30.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறவுள்ளது.



ஏழை, எளிய மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும், பின்தங்கிய பொருளாதார நிலை காரணமாக மாணவ, மாணவிகள் கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றலை தடுக்கவும், மத்திய, மாநில அரசுகள் சார்பில் வங்கிகள் மூலமாக கல்விக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்விக் கடனானது அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கும், தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவம் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கும், தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் வழங்கப்படும். திட்டத்தின் வாயிலாக மாணாக்கர்களுக்கு படிப்புச் செலவு, புத்தகம், கணினி வாங்குதல், விடுதி மற்றும் உணவு வசதிக்கு தேவையான நிதி உதவி கணக்கிடப்பட்டு அதிகபட்சம் ரூ.7.50 இலட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் வங்கிகளால் வழங்கப்பட்டு வருகிறது.



கடன் வழங்கும் முகாமில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லுாரி மாணாக்கர்களும் கலந்துகொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி கிளைகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மாணவ, மாணவிகள் கடன் பெறுவதற்கென உள்ள இணைதளம் www.vidyalakshmi.co.in மூலம் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம்.



மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடன் அனுமதி ஆணைகளை வழங்கவுள்ளார்கள். மேற்சொன்ன கடன் வழங்கும் முகாமில் அனைத்து தகுதிவாய்ந்த மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு உடனடியாக கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad