திண்டுக்கல்லில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய கவரிங் கடை ஓனர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல்லை சேர்ந்தவர் பரமசிவம்(56). இவர் திண்டுக்கல்லில் கவரிங் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கினார். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா, சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு பரமசிவத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment