கலைஞரின் பேனா பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தி மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களின் பார்வைக்காக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைஞரின் பேனா பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில், திறந்து வைத்து, கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து , புகைப்படத் தொகுப்பினை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் பார்வைக்காக துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment