கொடைக்கானலில் போதை காளன் விற்பனை செய்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஸ், ராஜபாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின் உள்ளிட்ட மூவரை கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்,இந்த வழக்கானது மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது,வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, நபர் ஒருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வரும் நாட்களில் போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க கொடைக்கானல் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment