நிலக்கோட்டையில் முகநூலில் பழகிய இளைஞரிடமும் அவரது தந்தையிடமும் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்த குருவையா இவரது மகன் ரோஷன்(27) இவருக்கு முகநூலில் பொள்ளாச்சியை சேர்ந்த உஷா(40) என்பவர் அறிமுகமாகி இருவரும் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் உஷா தன்னை காதலிக்க வலியுறுத்தியதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறி ரோஷன் செல்போன் இணைப்பை தடை செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த உஷா தனது தோழி கிருஷ்ணவேணி மற்றும் நண்பர் சிவஞானம், சௌந்தர்ராஜன் ஆகியோரின் உதவியுடன் ரோஷனின் தந்தை குருவையாவை பணம் கேட்டு மிரட்டியதுடன் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி ஒட்டப் போவதாக மிரட்டினார். இதற்கு அவர் சம்மதிக்காததால் ரோஷன் உஷா புகைப்படங்களை இணைத்து நிலக்கோட்டை பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உஷா, கிருஷ்ணவேணி, சிவஞானம் ஆகிய 3 பேரை கைது செய்து சௌந்தர்ராஜனை தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment