வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு மாண்புமிகு அமைச்சர்கள் திரு.இ.பெரியசாமி திரு.மூர்த்தி திறந்து வைத்தார்கள்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை நேற்று (10.11.2023) திறந்து வைத்தார்கள். அருகில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர திரு.மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வன், செயற்பொறியாளர் திரு.தமிழ்செல்வன் (நீர்வள ஆதாரத்துறை), உதவி பொறியாளர் திரு.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சீரிப்பாய்ந்த ஆற்று நீரில் மலர்களைத் தூவி மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment