திண்டுக்கல்லில் செயற்கை ரசாயனம் கலந்து சுவீட்ஸ் தயாரித்த கடைகளுக்கு அபராதம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் மொத்தமாக ஆர்டர் எடுத்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம், திருச்சி சாலை, பழனி சாலை பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவில் செயற்கை ரசாயன பூச்சு கலந்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது . தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment