வேடசந்தூர்: அய்யலூர் ஆடு கோழி சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யலூர் ஆடு கோழி சந்தை நேற்று நவ.9ம்தேதி காலை 6 மணிக்கு தொடங்கியது வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் இந்த சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை. திருச்சி. கரூர். புதுக்கோட்டை. போன்ற வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு கோடிகளை வாங்க இந்த சந்தைக்கு காலை 3 மணிக்கே வந்து சேர்ந்தனர் அதனால் சந்தையில் உள்புறமும் ரோட்டின் வெளிப்புறமும் கூட்டம் அலைமோதியது இந்த சந்தையில் ஆடு கோழிகளின் விலை அதிகரித்தாலும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு ஆடு கோழிகளை வாங்கி தங்களது வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் வியாபாரிகள். சந்தையின் முடிவில் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடு கோழி விற்பனை ஆனது இதனால் அய்யலூர் சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment