திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அடிக்கல் நாட்டி பேசினார்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இன்று (22.11.2023) அடிக்கல் நாட்டி, பேசினார். அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் திருமதி ரா.மனோரஞ்சிதம், சித்தையன்கோட்டை பேரூராட்சித் தலைவர் திருமதி மு.போதும்பொண்ணு. பேரூராட்சி துணைத்தலைவர் திரு.மு.ஜாகீர்உசேன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் திரு.ம.பாலமுருகன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment