திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு நபர்களிடம் இணைய வழியில் மோசடி செய்தவர்களிடமிருந்து ரூ.1,70,000 மீட்டு எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் டி.புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரிடம் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மற்றும் ரூ 70 ஆயிரம் மொத்தம் 1,70,000 பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக S.P.பாஸ்கரன் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து துரிதமாக நடவடிக்கை எடுத்து ஏமாற்றியவர்களிடமிருந்து 1,70,000 ரூபாய் பணத்தை மீட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment