திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட கொடைக்கானல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று (22.11.2023) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ராஜா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.சத்தியநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திரு.சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment