திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 20 November 2023

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள்

 


திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள்



நிலக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை பாஜக நிர்வாகிகள் சந்தித்து வழங்கினர் 



நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இன்று காலை  வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை பாஜக நிர்வாகிகள் சந்தித்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வழங்கினர்.



குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக  உள்ள குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கூடத்தால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் வசிக்க  முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



இதனை ஏற்கனவே நான்கு மாதத்திற்கு முன்பாக குப்பை உரக்கூடத்தை நேரடியாக பார்வையிட்டுச் சென்ற மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் உடனடியாக அப்புறப்படுத்த சொல்லியும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் காலம் தாழ்த்தி வருவதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவரும் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனபாலன் மத்திய நிதி அமைச்சரை  சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad