கொடைக்கானலில் போதை காளான் விற்ற வாலிபர் கைது:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜெகநாதன் என்பதும், சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஜெகநாதனை கைது செய்து அவரிடம் இருந்து போதை காளானை பறிமுதல் செய்தனர். போதை காளானை எங்கிருந்து வாங்கினார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment