மிலாது நபி: கரீபுன் நிவாஸ் ஐந்தாம் ஆண்டு மாபெரும் கந்தூரி விழா:
திண்டுக்கலில் மிலாடி நபியை முன்னிட்டு இல்லாதோருக்கு ஒரு வேளை உணவாவது வழங்கிட வேண்டும் என்பதற்காக கரீபுன் நிவாஸ் நினைவாக ஐந்தாம் ஆண்டு மாபெரும் கந்தூரி விழா தனியார் திருமண மண்டபத்தின் வெகு விமர்சையாக நடைபெற்றது. 1500 கி அரிசி, தக்காளி, வெங்காயம் மற்றும் பல்வேறு மளிகை பொருட்கள் கலந்து 30க்கும் மேற்பட்ட அடுப்புகள் மூலம் பெரிய பாத்திரங்களை கொண்டு நெய் சாதம்,கேசரி மற்றும் தால்சா தயார் செய்து பேகம்பூர் ,பூச்சி நாயக்கம்பட்டி ,அசநாத் புரம், மா மு பள்ளி வாசல், யூசுபியா நகர் மற்றும் பிஸ்மி நகர் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் கடந்த ஆண்டு 10ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு 12,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மாபெரும் அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment