நிலக்கோட்டை :காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண் காதலன் தந்தையிடம் பேரம் பேசிய போது கொத்தாக தூக்கிய காவல் துறை :
திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா உட்பட்ட கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த குருவையா மகன் ரோஷன் இவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக பொள்ளாச்சியை சேர்ந்த உஷா போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குருவையாவிடம் இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்க 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதனால் குருவையா நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உஷா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கிருஷ்ணவேணி சிவஞானம் ஆகிய 3 நபர்களையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment