எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது 72 ஆயிரம் பணம், 11 டூவீலர்கள், 2 சேவல்கள் பறிமுதல் வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது எரியோடை அடுத்த கோவிலூர் மலேசியா முருகன் கோவில் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட உதயகுமார், காளிமுத்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்து 11 டூவீலர்கள், 72 ஆயிரம் பணம், 2 சேவல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எரியோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரியோடு காவல்துறையினருக்கு தெரியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து எரியோடு காவல் நிலையத்தில் கைது செய்தவர்களை ஒப்படைத்தார் டிஎஸ்பி.துர்காதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment