பழனி அருகே ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட தகராறை அடுத்து 2 தனியார் பேருந்துகள் பறிமுதல்
பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்ற 2 தனியார் பஸ்களிள் ஓட்டுநர்களிடையே பச்சளநாயக்கன்பட்டி அருகில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 2 ஓட்டுநர்களும் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பழனி - திண்டுக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயக்குடி போலீசார் 2 பஸ்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தினர். மேலும் 2 பஸ்களின் ஓட்டுநர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment