நடப்போம் நலம் பெறுவோம்திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று காணொளி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் R.M. காலனி கூடை பந்தாட்ட மைதானத்தில் சுகாதார நடை பயிற்சி செல்லும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
R.M காலனி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கி E.V.R.ரோடு, M.V.M. கல்லூரி திருப்பம், R.M.காலனி குறுக்கு சாலைகள் வழியாக மீண்டும் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் முடிவடைகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment