நத்தம் அருகே கோவிலுக்கு சொந்தமான பஜனை மடம் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பெரிய விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான நத்தம் கிராமம் சர்வே எண் 433/6ல் உள்ள பஜனை மடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து புகார் வந்ததையடுத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், தாசில்தார் விஜயலட்சுமி (கோவில் நிலம்), நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலெட்சுமி, காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த பஜனை மடத்தை மீட்டனர். பின்னர் அந்த பஜனை மட வாசலில் இது கோவிலுக்கு சொந்தமானது இங்கு யாரும் அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment