திண்டுக்கல்லில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு சமையல் கூடத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 23 November 2023

திண்டுக்கல்லில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு சமையல் கூடத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்


 திண்டுக்கல்லில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு சமையல் கூடத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தல் 



திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1200 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். காலை உணவு திட்டத்திற்கு மேற்கு ரத வீதி நேருஜி நினைவு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் உணவு கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் செபாஸ்டின் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அட்டவணைப்படி அரிசி உப்புமா மற்றும் காய்கறியுடன் சாம்பார் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனை சாப்பிட்டு ஆய்வு செய்தனர்.



மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, கவனமாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும். தொடர் மழை பெய்து வருவதால் சமையல் கூடத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad