நிலக்கோட்டை: அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை:
திண்டுக்கல்மாவட்டம்நிலக்கோட்டை அருகே, பழைய சிலுக்குவார்பட்டி சேர்ந்த சுகந்தகுமார் (42) இவர், சவுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி தமிழ்ச்செல்வி இவர்களின் 17 வயது மகன் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த சில தினங்களாக பள்ளிக்குச் செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையால் மின்விசிறியில் போட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment