திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ்:
திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் உள்ள வேணுபிரியாணி கடையில் நேற்று முன்தினம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் கரப்பான்பூச்சி இருந்ததாக செய்தி வெளியே வரவே இன்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த குழுவினர் சமையல்அறை. உணவு பரிமாற பயன்படுத்தப்படும் பாத்திரம், உணவு பொருட்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற முறையில் இருந்ததற்காக 32, 63, 58 ஆகிய பிரிவுகளின்கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய தயாரித்து வைக்கப்பட்டிருந்த பிரியாணியின் தரத்தையும் ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். உணவு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை சென்னை கிண்டியில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சுகாதார குறைபாடு தொடர்பாக 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர். தமிழக குரல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment