ஆத்தூர் :செம்பட்டி கோழிசேவல் சந்தையில் இன்று 2 லட்சம் ரூபாய் வர்த்தகம்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட செம்பட்டி கோழி சேவல் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று 17:11:23 காலை 8 மணிக்கு சந்தை தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல். ஆத்தூர். ஒட்டன்சத்திரம். வேடசந்தூர். கன்னிவாடி. அய்யம்பாளையம். சித்தையன் கோட்டை. நிலக்கோட்டை. மேட்டுப்பட்டி. பாறைப்பட்டி. மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் கோழி சேவல் வளர்ப்போர்.விவசாயிகள் இந்த சந்தைக்குவந்து கூடினர்.இன்று நடந்த சந்தையில் 300க்கும் மேற்பட்ட கோழி சேவல் விற்பனைக்கு வந்தன சந்தையின் முடிவில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment