திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது
சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி கிரிவல பாதையில் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள கிரிவீதியில் வலம்வந்தார். அப்போது சூரர்களான தாரகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன் ஆகியோரை முருகப்பெருமான் தனது சக்திவேல் கொண்டு வதம் செய்தார்.பின்னர் முருகப்பெருமானின் கோபம் தணிக்க தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவிலில் கொடி இறக்கப்பட்டது. மேலும் முருகப்பெருமான் கோவிலுக்குள் வலம்வந்தார். அப்போது அவருக்கு சாந்திஹோமம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment