உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, திண்டுக்கல் பி.வி.கே.கிராண்ட் ஹோட்டலில் இன்று(29.11.2023) நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ். மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment