திண்டுக்கல் அருகே இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து தன் பெயரில் மாற்றிய தம்பியை கைது செய்து சிறையில் அடைப்பு சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் அருகே சொரிப்பாறைப்பட்டி பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை ரசிதா பேகம், உமரு நிஷா ஆகியோருக்கு தானமாக தந்தை பக்ருதீன் எழுதிக் கொடுத்தார். தம்பியான ஜமால்பாரூக் கடந்த 2022 ஆம் ஆண்டு செந்துறையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து இரண்டரை ஏக்கர் நிலத்தை தன் பெயரில் மாற்றினார். இதை அறிந்த ரஷிதா பேகம் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் அவர்களிடம் புகார் அளித்ததின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவி மேற்பார்வையில் எஸ்.ஐ.கள் சேகர்பவுல்ராஜ், செல்வராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜமால் பக்ருதீன், உம்முகுலுதுபீபவீ, மும்தாஜ், அபுதாகிர், சிவனேசபிரபு, செந்துறை சார்பதிவாளர் சுப்பையன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜமால் பாரூக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment