திண்டுக்கல்லில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி அவர்கள் இன்று(06.11.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு அரசு கால் நடைபராமரிப்பு துறை தேசிய கால் நடை நோய் தடுப்பு திட்டம் கோமாரி நோய் தடுப்பூசி முகாமும் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி அவர்கள் இன்று(06.11.2023) தொடங்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை உபகரணங்களை வழங்கினார். அருகில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.பெ.நா.இராம்நாத் திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.முகமது அப்துல்காதர், உதவி இயக்குநர்(கால்நடை நோய் புலனாய்வு பிரிவு) மரு.விஜயகுமார் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment