ஆத்தூர் அருகே காமராஜர் அணை அருகே முட்புதரில் அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் பெண் உட்பட 5 பேர் கைது
திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் கடந்த 13-ஆம் தேதி முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் செம்பட்டியை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்த முனியாண்டி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து சற்குணம், கருத்தராஜா, ஜெயராஜ், மாயாண்டி, முனியம்மாள் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான செங்கல் சூளை உரிமையாளர் சகாயநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment