பழனி இடும்பன் கோவிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் அமைந்துள்ளது.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் இடும்பன், கடம்பன், முருகப்பெருமானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. பழனிக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளத்தில் புனிதநீராடிவிட்டு இடும்பனை தரிசிப்பது வழக்கம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் 26 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முடிவு செய்தது.
நேற்று மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியுடன் 4-ம் கால யாகம் தொடங்கியது. பின் யாகம் நிறைவு பெற்று திருமுறை விண்ணப்பம் திருவடி விண்ணப்பம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் அவை கோவில் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment